
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பொது கழிப்பறைகளில் உள்ள கழிப்பறைக்கு தரை வரை முழு கதவு இல்லாமல கீழே இடைவெளி இருக்கும். இதற்கான காரணம் என்ன தெரியுமா? இப்படி இடைவெளி வைப்பது அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். கழிப்பறைக்குள்ளே நுழையாமல் தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்துவிடலாம்.
கழிப்பறையில் இருக்கும் துர்நாற்றமும் அடிப்பகுதி மூடப்படாததால் விரைவாக வெளியேறும். கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டாலோ அல்லது கீழே விழுந்துவிட்டாலோ கீழ் பகுதியிலிருந்து எளிதில் தெரிந்துக் கொள்ளலாம்.