அனைத்து மக்களுமே சிலிண்டரை பயன்படுத் தும் விதமாக  மத்திய அரசு பல்வேறு திட்டங்களை இதற்காக செயல்படுத்தி வருகிறது. மேலும் சிலிண்டர் நிறுவனங்களும் புதிய இணைப்பை பெறுவதற்கு வழிமுறைகளை மிகவும் எளிதாக்கி இருக்கிறது. மேலும் சிலிண்டர் புக் செய்வதற்கு பல்வேறு வழிமுறைகள் இருக்கிறது. அந்தவகையில் கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவன அலுவலக எண்களையும், கட்டணமில்லா பொது எண்ணையும் தொடர்பு கொண்டும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்.

இதற்கு பாரத் கேஸ், இண்டேன், எச்.பி. ஆகியவை தனித்தனி எண்களை பராமரித்து வருகின்றன. கீழ்காணும் எண்களே அந்த எண்கள் ஆகும். இவற்றில் தொடர்பு கொண்டு கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். * பாரத் கேஸ் 9486056789, * இண்டேன் கேஸ் 7718955555 ,*எச்.பி கேஸ் 90922 23456