தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால் அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வயதானவர் மற்றும் குழந்தைகள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 20 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று கூறிய அமைச்சர் பொது இடங்களில் மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா பரவலை தவிர்க்க முடியும் என கூறியுள்ளார்.