தமிழ் சினிமாவில் அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் மற்றும் கலகலப்பு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அஞ்சலி. இவர் சமீப காலமாக தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது Gangs of Godavari என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது.

இதில் நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்ட நிலையில் நடிகை அஞ்சலி மேடையில் இருந்தபோது அருகில் வந்த பாலகிருஷ்ணா அவரை தள்ளிவிட்டார். இதனால் பதறிப் போன அஞ்சலி என்ன சொல்வது என்று தெரியாமல் சிரிப்பது போல சமாளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.