தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் செயல்முறை தற்போது நடைபெற்ற வரும் நிலையில் அதற்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு குறித்த தேதி இன்னும் வெளியிடப்படாத நிலையில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன்பு முதலில் கல்லூரியின் தேர்ச்சி சதவீதம் குறித்து தெரிந்து இருக்க வேண்டும். சில கல்லூரிகள் கவுன்சிலிங் 100 சதவீதம் இடங்களை நிரப்பு இருக்கும்.

ஆனால் கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் 50 சதவீதம் மட்டும் தான் இருக்கும். கேம்பஸ் இன்டர்வியூ வரும் நிறுவனங்கள் முதலில் மாணவர்களின் தேர்ச்சியை தான் பார்ப்பார்கள். கல்லூரிகளை தேர்வு செய்யும் முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையத்தில் தேர்ச்சி சதவீதம் தொடர்பாக மாணவர்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் கல்லூரிகள் இடங்களை நிரப்பிய அளவையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.