சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 400-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் ஆகிய தொழில்நுட்ப படிப்புகளுக்கான விண்ணப்ப சேர்க்கை முடிவடைந்த நிலையில், 2,49,918 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் தங்களுடைய அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 12-ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இந்த படிப்புகளில் சேர பாலிடெக்னிக் மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் www.tnlea.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான கால அவகாசம் ஜூலை 7-ம் தேதி ஆகும்.