
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒவ்வொரு வருடமும் வெப்ப காற்று பலூன் திருவிழா நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்ப காற்று பலூன் திருவிழாவில் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
அதன் சோதனை ஓட்டமாக நேற்று நான்கு பலூன்கள் 100 அடி உயரம் வரை பறந்ததை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்த நிலையில் இந்த பலூன் திருவிழாவிற்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்ட இன்று வானில் பறக்க விடப்பட உள்ளன