
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்த நிலையில் இன்று சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தை பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.