
அரியலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் அரியலூரை விபத்து இல்லா மாவட்டமாக மாற்றும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.