கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அன்று பெண் ஒருவர் உதவி கேட்க சென்றபோது தன்னுடைய 17 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிஐடிக்கு மாற்றப்பட்டது. சிஐடி போலீசார் நேற்று நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்தனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாய் திறக்காமல் இருக்க எடியூரப்பா அந்த தாய்க்கும் அவருடைய பெண்ணுக்கும் பணம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பேஸ்புக்கில் எடியூரப்பாவை குற்றம் சாட்டி வீடியோவை வெளியிட்டுள்ளார். உடனே எடியூரப்பாவின் ஆதரவாளர்களான பலரும் அந்த பெண்ணை சந்தித்து வீடியோவை நீக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும் எடியூரப்பா சொன்னதாக கூறி அவர்களுக்கு 2 லட்சம் பணமும் கொடுத்துள்ளார்கள் என்று அந்த குற்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கடந்த மாதம் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.