
நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் வழங்கப்படும் நிலையில் சிலர் இதில் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிந்து அதனை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்றும் இகேஒய்சி அப்டேட்டை சரிபார்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இ கேஒய்சி அப்டேட்டை சரிபார்க்காதவர்களின் ரேஷன் கார்டுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தியாக இகேஒய்சி சரி பார்வை முடிப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மேலும் அதன்படி ஏப்ரல் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதற்குள் இந்த செயல்பாட்டினை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.