திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சாலமோன் டேவிட் என்பவர் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது டேவிட் தமிழ்நாடு ஐந்தாம் பாட்டாலியன் என்சிசியில் இருக்கிறார். இந்த நிலையில் சாலமோன் டேவிட் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது ராணுவ வீரர்கள் கன்னிவெடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஏதுவாக ஒரு ஷூவை வடிவமைத்துள்ளார்.

ராணுவ வீரர்கள் அந்த ஷூவை அணிந்து நடக்கும்போது 3 மீட்டர் தூரத்தில் கன்னிவெடி புதைத்து வைத்திருப்பதை சென்சார் கருவி மூலம் அறியலாம். இந்த மாணவர் டெல்லியில் நடைபெற்ற கண்டுபிடிப்புக்கான போட்டியில் தமிழ்நாடு சார்பாக பங்கேற்றார். அந்த போட்டியில் மொத்தம் 55 பேர் பங்கேற்றனர். அதில் சாலமோனுக்கு முதல் பரிசு கிடைத்தது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற சாலமோனை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.