
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கவின் லிப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் கடைசியாக பிளடிபக்கர் படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவின் உடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இதில் கவினுக்கு ஜோடியாக ருஹானி ஷர்மா நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் வரும் மே மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது.
And here’s the #firstlook of our baby #MASK !!! Yours truly has turned producer with this one 🎭 so wish me luck 🤞🏼🤞🏼🤞🏼
Big thank you to everyone involved in the film 🙏🏻🙏🏻🙏🏻@GrassRootFilmCo @BlackMadra38572 @tsmgo_official #VetriMaaran @Kavin_m_0431 @andrea_jeremiah @gvprakash… pic.twitter.com/E7vfrKyqht
— Andrea Jeremiah (@andrea_jeremiah) February 26, 2025