கடலூர் மாவட்டம் வாழைகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன் இவர் விவசாயி. இவரது மனைவி மாலா. இந்த தம்பதியின் மகள் கதிர் செல்வி(27) இளங்கலை வேளாண்மை பட்டப்படிப்பு படித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கதிர் செல்வி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் அந்த பணிக்கு செல்லாமல் குரூப்-1 தேர்வுக்கு கடுமையாக முயற்சி செய்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கதிர் செல்வி குரூப் ஒன் தேர்வு எழுதினார்.

அதன் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அந்த தேர்வில் கதிர் செல்வி மாநில அளவில் முதலிடம் பிடித்த சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தை கதிர் செல்வி நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளார். கதிர் செல்வி படித்த பள்ளியிலும் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.