
தொகுப்பாளராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடிப்பில் ரிலீசான அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அமரன் திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது. இந்த படத்திற்கு ‘மதராஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் பிறந்தநாளை ஒட்டி, படத்தின் தலைப்பு குறித்த க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
