2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். இம்மாதம் 1-ஆம் தேதியிலிருந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள் மற்றும் 2,426 உதவி விற்பனையாளர்கள் ஊதிய உயர்வால் பயன் பெற உள்ளனர்.