திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.ஜே சூர்யா. இவர் இயக்கிய வாலி, குஷி ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. அன்பே ஆருயிரே, வியாபாரி, நண்பன், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். சமீப காலமாக எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருந்தது. அதன் பிறகு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராயன், இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளார். இப்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் எஸ்.ஜே சூர்யாவிற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டாக்டர் பட்டத்தை வழங்கினார்.