
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு துணிவு படத்தை கொண்டாடும் விதமாக பல இடங்களில் அஜித் ரசிகர்கள் கட் அவுட் மற்றும் பேனர்கள் வைக்கிறார்கள். அந்த வகையில் மலேசிய நாட்டில் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் ஒரு திரையரங்கில் நடிகர் அஜித்துக்கு சுமார் 30 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் 9.144 மீட்டர் இருக்கிறது.
இது நாட்டில் ஒரு நடிகருக்காக வைக்கப்பட்ட மிக உயரமான கட்டவுட் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நடிகர் அஜித்தின் கட்டவுட் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட கட் அவுட் மலேசியாவில் உள்ள பிஜே எல்எஃப்எஸ் ஸ்டேட்டஸ் சினி பிளக்ஸ் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான அங்கீகாரச் சான்று திரைப்பட விநியோகஸ்தரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் துணிவு திரைப்படத்தின் மலேசியா விநியோக உரிமையை பிரபலமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Biggest Cut Out For An Actor In Malaysia, We Create Record 🫡🔥#ThunivuByMSC #malikstreams #Thunivu #OperationThunivu #Ajithkumar @malikstreams pic.twitter.com/JvRPsecjLO
— MALAYSIA AJITH FAN CLUB (@Thalafansml) January 11, 2023