
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விடாமுயற்சி படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற சவதீகா பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆக 9 நாட்களே உள்ள நிலையில் பட குழுவினர் ஒரு சிறப்பு போஸ்டரை ரிலீஸ் செய்தனர். அந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.
