தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் தற்போது விடா முயற்சி திரைப்படத்தில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது பாடலின் ஆடியோவை பட குழு வெளியிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் வீடியோ வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இசையில் அஜித் மற்றும் திரிஷாவின் ரொமான்டிக் பாடலாக இது வெளிவந்துள்ளது.