தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது.

போக்குவரத்து துறைக்கு 12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவித்தார். இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளுக்குமொத்தம் 1,125 மின்சார பேருந்துகள் வழங்கப்படும். 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைக்க 70 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.