இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது , காஞ்சிபுரம், ஈரோடு, சிவகங்கை, தருமபுரி, தேனி, கடலூர், ராணிப்பேட்டை, நாகை ஆகிய மாவட்டங்களில் தோழி விடுதிகள் அமைக்கப்படும்.

பெண்கள் கடமையை செய்ய மட்டும் பிறந்தவர்கள் அல்ல. உரிமையை பெறவும் பிறந்தவர்கள். 8 மாவட்டங்களில் 72 கோடி மதிப்பில் 700 படுக்கை வசதிகளுடன் தோழி விடுதிகள் அமைய உள்ளன. பெண்களின் உரிமையை உறுதி செய்யும் ஆட்சியாக தி.மு.க செயல்படுகிறது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.