
இன்றைய தலைமுறையினர் கலைகளை மறந்து செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்தில் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். சிலர் வயதை பொருட்படுத்தாமல் தனக்கு பிடித்த துறைகளில் சாதித்து வருகின்றனர். திறமைக்கு வயது தடை இல்லை என்பதற்கு சான்றாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னை மாவட்டம் தாளம்பூரில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 96 வயதுடைய மூதாட்டி பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ளார். 96 வயதிலும் பாட்டி பரதநாட்டியம் ஆடுவதால் மக்கள் வியந்து பார்க்கின்றனர்.