
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான சங்கர் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சித்தார்த், நடிகை காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் ஜூலை மாதம் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் ஆன பாரா நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் முதல் பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது.