
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய 170-வது திரைப்படத்தில் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாஸில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் திசையமைக்கும் நிலையில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக் குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதேபோல் நடிகர் சூர்யா நடிக்கும் சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் ஒரே நாளில் இரு பெரும் பெரிய படங்கள் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.