
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தின் தளபதி 69 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ, பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் படத்திற்கு ஜனநாயகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் குடியரசு தின விழாவின் போது வெளியானது. இது நடிகர் விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு என்பது இருக்கிறது.

நடிகர் விஜய் கடந்த வருடம் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் காரணமாக ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து அவர் விலகுகிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு வெளியிட்டுள்ளது .இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகிறது. மேலும் இந்த அறிவிப்பை போஸ்டர் வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.