தமிழ்நாட்டில் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது. கடந்த வருடம் பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்ற நிலையில் மொத்தம் 11 நாடுகள் இந்த விழாவில் கலந்து கொண்டது.

அந்த வகையில் இந்த வருடமும் ஜனவரி 10 முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை சர்வதேச பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா சென்னை, மதுரை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழா நடைபெறும் தேதியை தமிழ்நாடு அரசு பின்னர் அறிவிக்கும். மேலும் தமிழ்நாடு அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்த பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.