ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 76 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி 2-வது உலக கோப்பையை வென்றுள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.