
2024 ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த SRH அணி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
அதனைப் போலவே கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் KKR 20 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், RR 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், RCB நான்காவது இடத்திலும் உள்ளன. இதனால் வருகின்ற மே 22ஆம் தேதி நடைபெற உள்ள Eliminator போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகின்றன. இதில் யார் முதல் இடத்தை தக்க வைத்து கொள்வார்கள் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.