தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் சுகுமார் இயக்கத்தில் நடித்த புஷ்பா திரைப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த நிலையில், தற்போது புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த மாதம் 6-ம் தேதி வெளியான நிலையில் வசூல் வேட்டை புரிந்து வருகிறது.

அந்த வகையில் படம் வெளியாகி 28 நாட்களில் தற்போது 1799 கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்த படத்தில் ராஸ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விடுமுறையில் இன்னும் வசூல் குவிக்கும் என்பதால் 2000 கோடி வரை வசூல் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.