பொதுவாக சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுகளும் ரசிக்க வைப்பதாக இருக்கும். அந்த வகையில் தாய்லாந்து நாட்டில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம் குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு குழந்தைகளுக்கு தவழும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஒரு புறம் இருக்கும் வெள்ளை கோட்டில் இருந்து குழந்தைகள் தவழ்ந்து மறுபுறம் உள்ள வெள்ளை கோட்டிற்கு வர வேண்டும்.

இந்த போட்டியில் குழந்தைகள் வெற்றிபெற பெற்றோர்கள் படாத பாடுபடுவார்கள். அதேபோன்று போட்டியின் போது குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் ‌ கவரும் வகையில் அமையும். அந்த வகையில் தவளும் போட்டியின் போது ஒரு குழந்தை அந்த இடத்திலேயே அசந்து தூங்கி விடுகிறது. அந்த குழந்தையை விழிக்க செய்வதற்காக பெற்றோர்கள் தீவிர முயற்சி எடுக்கிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.