
2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு அட்டவணை டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 வகையான போட்டித் தேர்வுகளும் அதோடு 15000 காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 4.50 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்த ஆண்டை விட கூடுதலாக ஐந்தாயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.