மேற்கு வங்கத்திலுள்ள ஜல்தபாரா தேசிய பூங்காவிற்கு 7 சுற்றுலா பயணிகள் சென்றபோது அவர்கள் வாகனம் மீது 2 காண்டா மிருகங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. அதாவது, 7 சுற்றுலா பயணிகள் ஜீப்பில் ஏறி காட்டுக்குள் சென்றனர். அங்கு 2 காண்டாமிருகங்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளது. இதை சுற்றுலாப் பயணிகள் விரைவாக தங்கள் கேமராவில் படம்பிடித்தனர்.

இதையடுத்து பயணிகளின் வாகனங்களை 2 காண்டாமிருகங்கள் துரத்திய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் சென்ற ஜீப் குறுகியப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதன்பின் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த சுற்றுலா பயணிகளை மீட்டு சுகாதார மையத்திற்கு அனுப்பி வைத்தனர். இவ்வாறு காண்டா மிருகங்கள் சுற்றுலா பயணிகளை ஓட ஓட விரட்டிய சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.