தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விக்ரம். இவர் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை பட குழு அறிவித்துள்ளனர்.

அதன்படி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கலான் திரைக்கு வருகிறது. மேலும் இதனை இயக்குனர் பா. ரஞ்சித் வீடியோ மூலம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் விக்ரம் ரசிகர்கள் மத்தியில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.