கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் கடந்த மாதம் ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்று சோதனை நடத்தியதில் ரூ‌.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டிலிருந்த 2 பேர் தப்பி ஓடிய நிலையில் அவர்களை தனி படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது ஆல்வின் செபாஸ்டின் (26), ஷைன் ஷாஜி (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் கடத்தலில் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டது ஒரு பெண் என்பது தெரிய வந்தது. இவர் பெங்களூருவில் இருந்து ஆம்னி பஸ் மூலமாக கேரளாவுக்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளனர். இதில் முக்கிய ஏஜெண்டாக செயல்பட்டவர் ஆலப்புழாவை சேர்ந்த ஜூமி (24). இவர் அதன் மூலம் கிடைத்த ‌ பணத்தில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. மேலும் இவரை பெங்களூருவில் வைத்து காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.