ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நஹவூர் மாவட்டம் நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த பிரேம ராம் என்ற 32 வயது மதிக்கத்தக்க நபர் மது போதைக்கு அடிமையானவர். இவர் குடித்துவிட்டு அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்த நிலையில் மது போதையில் இருந்து அவர் தன்னுடைய மனைவியை தாக்கி தன்னுடைய பைக்கில் மனைவியின் கைகளை கட்டி தர தரவென இழுத்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தாய் வீட்டுக்கு சென்று விட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.