1858 ஆம் ஆண்டு முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் 1860 ஆம் ஆண்டு இந்திய தண்டனை சட்டத்தை அமல்படுத்தினார். நாடு சுதந்திரம் அடைந்து குடியரசு ஆணா பின்னரும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த சட்டங்களில் அடிக்கடி திருத்தங்கள் செய்யப்பட்டு அவை நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஆங்கிலேயர் சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்த மத்திய அரசு குற்றவியல் சட்டங்களை மூன்றாக வகைப்படுத்தி ஜூலை 1 முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சிறிய அளவிலான திருட்டுக்கள் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு புதிய சட்டத்தின்படி சமூக சேவைகள் செய்யும் வகையில் உத்தரவிடப்படும்.