தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் அதன் பிறகு அவர்கள் சபையை விட்டு வெளியேறினர். அதன்பின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவினர் சென்ற நிலையில் அவர்கள் கவர்னரை சந்தித்து கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கள்ளக்குறிச்சியில் விஷச்ராயம் மரணம் என்பது மிகவும் மோசமானது. ஆளுங்கட்சியினர் ஆதரவு இல்லாமல் நிச்சயம் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற வாய்ப்பில்லை.

மரக்காணம் கள்ளச்சாராய வழக்கை சிபிசிஐடி விசாரித்த போதிலும் ஒரு பலனும் இல்லை. இப்போது கள்ளச்சாராயம் தொடர்பாக மேற்கொள்ளும் சோதனைகளை முன்கூட்டியே செய்திருக்கலாம். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில் அவர்களின் துணை இல்லாமல் வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது கடினம். ஒரு நபர் விசாரணையின் மூலம் நியாயம் கிடைப்பது நிச்சயம் சந்தேகம் ‌தான். உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதா.? போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக தமிழக மாறிவிட்டதால் தற்போது மாநில போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது. எனவே இந்த விவகாரத்தில் நிச்சயம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் விசாரணை நியாயமான முறையில் நடைபெறும். மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூறினார்.