
உத்திர பிரதேசம் மாநிலம் மெயின்புரியில் கணவனுக்கு மனைவி கரண்ட் ஷாக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் போனில் பேசியதற்காக பிரதீப் சிங் என்ற நபர் தன்னுடைய மனைவியின் போனை பிடுங்கி உள்ளார்.
இதனால் பிரதீப்பிற்கு போதை மருந்து கொடுத்து படுக்கையில் கட்டி வைத்து அவருடைய உடலில் மனைவி மின்சாரம் பாய்ச்சியுள்ளார். தடுக்க முயன்ற மகனையும் கடுமையாக தாக்கியுள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரதீப் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.