சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் தந்தை மகள் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சாமுவேல் சங்கர் (78) என்பவரும் அவருடைய மகள் சிந்தியாவும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் சாமுவேல் எபினேசர் என்ற டாக்டரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நீரிழிவு நோயினால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த சாமுவேல் சங்கர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர் சாமுவேல் வீட்டிற்கு வந்தபோது அவரிடம் சிந்தியா தகராறு செய்துள்ளார். அப்போது சிந்தியாவை டாக்டர் கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு தலையில் அடிபட்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார்.

இதில் சிந்தியா கணவரைப் பிரிந்து தன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை சாமுவேல் தான் நல்ல சிகிச்சை வழக்குவதாக கூறி சென்னைக்கு வரவழைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்த நிலையில் திடீரென தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியது. காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் இருவரின் சடலங்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. மேலும் இருவரும் இறந்த நிலையில் வீட்டிற்குள் ஏசியை போட்டுவிட்டு சாமுவேல் அங்கிருந்து வீட்டை பூட்டிவிட்டு கிளம்பியது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.