தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்  குமரி அனந்தன், இன்று (ஏப்ரல் 9) காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து அவரது மகளும், பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது X  பக்கத்தில் நெஞ்சை உருக்கும் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “தமிழிசை என்ற பெயர் வைத்து, ‘இசை இசை’ என்று கூப்பிடும் என் அப்பாவின் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது. நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர், தமிழோடு காற்றில் கலந்து விட்டார். போய் வாருங்கள் அப்பா” என உருக்கமாக கூறியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வருத்தத்தையும் உணர்வுகளையும் கிளப்பியுள்ளது. அரசியல் வாழ்விலும், தமிழ்மொழிக்காகவும் போராடிய குமரி அனந்தனின் வாழ்க்கை இன்று பல்லாயிரம் மக்களுக்கு நினைவாகியிருக்கிறது.

“>