
இஸ்ரேல் கடந்த வருடம் காசா மீது போர் தொடங்கிய நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக போர் நீடித்துவரும் நிலையில் அடுத்தது அவர் லெபனான் மீதும் தாக்குதலை தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக அழூக்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என்று இஸ்ரேல் கூறிய நிலையில் இந்த போரில் லெபனானில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு பேஜர் தாக்குதல் போன்றவைகளும் அரங்கேறியது.
இந்நிலையில் தற்போது லெபனான் மீதான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐநா சபை மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இஸ்ரேல் தற்போது போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணி முதல் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ள நிலையில், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.