
பிரபல விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகராக இருக்கிறார். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு சினிமா உலகிற்கு வந்து தன்னுடைய வாழ்க்கையில் உயர்ந்து நிற்கிறார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான “மெரினா” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களின் மூலம் சிறுவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
அதோடு இவருக்கு அபாரமான மிமிக்ரி திறமை இருக்கிறது . முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கிய அவர் தற்போது திரையுலகில் மிகவும் உயர்ந்த இடத்திற்கு சென்று தனக்கென தனி பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். மேலும் தந்தையை இழந்த நிலையிலும் கடின உழைப்பின் காரணமாக எந்தவித சினிமா பின் புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் சினிமாவில் இந்த அளவுக்கு உயர்ந்து மிகப்பெரிய நடிகராக உயர்ந்துள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்திற்கு 20 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.