
நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிவிட்டதாக புகார் கொடுத்த நிலையில் இந்த வழக்கை12 வாரத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஒருவேளை நேரில் ஆஜராகாவிட்டால் சீமானை கைது செய்ய நேரிடும் என எச்சரித்து போலீசார் அவருடைய வீட்டில் சம்மன் ஓட்டினர்.
இதனை நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் கிழித்துள்ளனர். இது தொடர்பாக கேட்க சென்ற போலீசாரை சீமான் வீட்டு காவலாளி தாக்கியுள்ளார். சீமான் வீட்டில் காவலாளியாக வேலை பார்ப்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவருடைய பெயர் அமல்ராஜ். இவர் போலீசாரை தாக்கியதோடு தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியுள்ளார். இதனால் போலீசார் அமல்ராஜை குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். அது பாயிண்ட் 3 துப்பாக்கி வகையை சேர்ந்தது. அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் 20 குண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
அதோடு மற்றொரு காவலாளி சுபாகர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரையும் நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் சோழிங்கநல்லூர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் மார்ச் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.