இருசக்கர வாகனம் ஓட்டும்போது உங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று ஹெல்மெட். மிகச் சிறிய தூரத்திற்கு கூட ஹெல்மெட் அணிந்து சவாரி செய்வது அவசியம். ஹெல்மெட் அணிவது என்பது உங்கள் உயிரை காப்பாற்றும் விஷயம். எனவே ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்ந்து ஹெல்மெட் அணியுங்கள் என்று தமிழக அரசு தெரிவித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதற்காக கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் காவல்துறையிடம் மாட்டிக் கொள்பவர்களுக்கு உதவும் வகையாக ஒரு நபர் ” போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க” என்ற தகவலை கூகுள் மேப்பில் பதிவு செய்துள்ளார். அதோடு அந்த பதிவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தப் பதிவு வைரலான நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா, எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து காவலர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் கூகுள் மேப்பில் பதிவிட்டால் மக்கள் அனைவரும் ஹெல்மெட் அணிய தொடங்குவார்கள் என்று தன்னுடைய எக்ஸ் இணையதளத்தில் கூறியுள்ளார். மேலும் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறையினருக்கு அறிவுரை கூறியுள்ளார்.