ரசிகர் ரேணுகா சாமி என்பவருடை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கன்னட நடிகை பவித்ரா கவுடா போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இவர் போலீஸ்காவில் இருக்கும் பொழுதே மேக்கப் செய்திருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விசாரணையின் ஒரு பகுதியாக இவரை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு காவல் துறையினர் அழைத்து சென்று வாக்குமூலம் எடுத்தார்கள்.

அந்த இடைவெளியில் அவர் லிப்ஸ்டிக் உடன் மேக்கப் போட்டு சிரித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். கொலை வழக்கில் விசாரணை  வளையத்தில்  உள்ள நடிகையை மேக்கப் போட அனுமதித்த பெண் எஸ்ஐக்கு கர்நாடக காவல் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.