பெரும்பாலும் மக்கள் பணத்தை வங்கிகளுக்கு இணையாக போஸ்ட் ஆபீசில் செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். வங்கியை விட சிறந்த லாபத்தை போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் கொடுக்கிறது. இங்கு அதிகமான வட்டி கிடைப்பதால் முதிர்வு காலத்தில் சேமிப்புடன் கூடுதல் வட்டியும் கிடைக்கிறது. பாதுகாப்பாக சேமிக்க நினைப்பவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் நல்ல பலனை கொடுக்கிறது. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஜூன் 30 வரையில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறித்து  மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த நிதியாண்டில் வட்டி விகிதமே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. போஸ்ட் ஆபீஸ் டெபாசிட்டில் ஒவ்வொரு மாதமும் சரியான தொகை முதலீடு செய்வதன் மூலமாக வட்டியை பெறலாம்.  10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 16 லட்சம் வரை திரும்ப கிடைக்கும். குறைந்தபட்சம் 100 என்ற தவணையில் இந்த முதலீட்டை தொடங்கலாம். இதில் 5.8 சதவீதம் வட்டி கிடைக்கிறது.