
இந்திய தபால் துறையானது பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த சிறு சேமிப்பு திட்டங்களில் பொதுமக்கள் இணைய வேண்டும் என்றால் அதற்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு மிகவும் அவசியம். எனவே தபால் நிலையத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயம். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி பான்-ஆதார் சரிபார்ப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இந்த புதிய விதிமுறையின் படி பான் கார்டை வருமானத்துடன் சரி பார்க்கும் செயல்முறை இருக்கும். இதன் மூலம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை வருமானவரித்துறை உறுதி செய்யும். உங்களுடைய ஆவணங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தபால் நிலையங்கள் உள்ள முதலீடு திட்டங்களில் இணைய முடியாது. எனவே தபால் நிலைய முதலீடு திட்டங்களில் இணைய வேண்டுமானால் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பது மிகவும் அவசியம். மேலும் இதை செய்யவில்லை என்றால் பல்வேறு விதமான சிரமங்களை சந்திக்க நேரிடும்.