சீன நாட்டில் வசித்து வரும் ஒருவருக்கு நுரையீரலில் கட்டி இருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக கஷ்கரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்க நுரையீரல் சம்பந்தப்பட்ட மருத்துவர் ஷாங்காயில் உள்ள மருத்துவமனையில் இருந்தார்.

அதாவது நோயாளி இருக்கும் இடத்தில் இருந்து 5000 கி.மீ தூரத்தில் மருத்துவர் இருந்துள்ளார். அந்த மருத்துவர் 5g தொழில்நுட்பம் கொண்ட அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவின் துணையோடு அந்த நோயாளிக்கு நுரையீரல் கட்டியை நீக்கினார். அதாவது அந்த மருத்துவர் இருக்கும் இடத்திலிருந்து ரோபோவை ஆபரேட் செய்து இந்த சிகிச்சையை ஒரு மணி நேரத்தில் செய்து முடித்தார்.

இதேபோன்ற ரோபோ இந்தியாவிலும் தயாரிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையும் செய்தது. அதாவது நோயாளி இருக்கும் இடத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மருத்துவர் ரோபோ மூலம் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோ சுமார் 5 கைகளை கொண்டிருக்கும். இதன் மூலம் இதய அறுவை சிகிச்சை கூட செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் முன் 3d தொழில்நுட்பம் கொண்ட 32 இன்ச் ஸ்கிரீன் இருக்கும். அது ஒரு கேமராவோட இருக்கும், அதோடு மருத்துவர் வேறு எங்கு பார்த்தாலும் அந்த ரோபோ சிகிச்சை செய்வதை நிறுத்தி விடும்.

மறுபக்கம் நோயாளியுடன் இருக்கும் அந்த ரோபோ 5 கைகளுடன் 8 மி.மீ கருவியுடன் சிகிச்சை மேற்கொள்ளும். இதுகுறித்து மருத்துவர் கூறியதாவது, இதை வைத்து நோயாளிகள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். அவர்கள் மருத்துவ வசதிக்காக டவுனுக்கு வர வேண்டியதில்லை என கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்று எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

“>