
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலின் திருமணத்திற்கு விராட் கோலியும், தோனியும் கோடிக்கணக்கில் பரிசு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது..
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை கடந்த திங்கட்கிழமை கண்டாலாவில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆனால், விராட் கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் திருமண விழாவில் பங்கேற்கவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள் விளையாடுவதால் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.விராட் கோலி திருமணத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், ராகுலுக்கும் அதியாவுக்கும் மறக்க முடியாத பரிசை அளித்துள்ளார். கே.எல்.ராகுலுக்கும், அதியாவுக்கும் திருமண பரிசாக விராட் கோலி பிஎம்டபிள்யூ காரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த காரின் மதிப்பு ரூ.2.17 கோடி.
இதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் கே.எல்.ராகுலின் திருமணத்திற்கு விலையுயர்ந்த பொருளை பரிசாக வழங்கினார். கவாஸாகி நிஞ்சா பைக்கை தோனி பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது. இந்த பைக்கின் மதிப்பு ரூ.80 லட்சம்.. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலின் திருமணத்திற்கு விராட் கோலியும், தோனியும் கோடிக்கணக்கில் பரிசு வழங்கியதால் ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.